பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கோயிலுக்கு வரும் இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளோடு வருவது பற்றி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகையான கங்கனா, இப்போது தலைவி மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இப்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தை மலையாள இயக்குநர் விபின் இயக்குகிறார். பேன் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் இந்த படம் உருவாக வுள்ள நிலையில் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.