Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 நாள் என ஆரம்பித்தோம்.. 100 நாட்கள் நடித்துவிட்டேன்.. விடுதலை பட அனுபவத்தைப் பகிர்ந்த விஜய் சேதுபதி!

vinoth
வெள்ளி, 1 மார்ச் 2024 (15:14 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் விடுதலை படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி இப்போது பேசியுள்ளார். அதில் “இந்த படத்துக்கு முதலில் 8 நாட்கள்தான் வெற்றிமாறன் சார் கேட்டார். வடசென்னையை மிஸ் செய்துவிட்டோம். இதிலாவது நடிக்கலாம் என்றுதான் முதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது வரை 100 நாட்களுக்கு மேல் நடித்துவிட்டேன். அந்த கதாபாத்திரங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது தாங்குகிறது. இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் செய்யவேண்டி இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments