Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்த விடுதலையான சாந்தன் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்த விடுதலையான சாந்தன் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

Siva

, புதன், 28 பிப்ரவரி 2024 (06:48 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் சில இலங்கை தமிழ் ஆதரவு அமைப்புகளின் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் ஒருவரான இலங்கை சேர்ந்த சாந்தன் என்பவர் உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் அவர் கடந்த 24ம் தேதி இவர் இலங்கை செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில் அவர் காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் உடன் நடிகை கஸ்தூரி திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?