Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறைச்சி உணவு இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிவிட்டது… இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு!

இறைச்சி உணவு இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிவிட்டது… இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு!

vinoth

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் நடந்த தனியார் உணவக திறப்பு விழா ஒன்றில் பேசும் போது இறைச்சி உணவின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசும்போது “ஒரு தலைமுறைய தீர்மானிப்பதே சிறுவயதில் உண்ணும் உணவுதான். இப்போது உணவால் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளன.  உணவின் தரம் மற்றும் சமையலின் தரம் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய இக்கட்டில் இருக்கிறோம்.

மனிதனுக்கு இறைச்சி இன்றியமையாதது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.  மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி இன்று அடிப்படை உரிமையாகி இருக்கிறது. நான் நிறைய இறைச்சி சாப்பிடுபவன்” எனக் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பின்னர் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இப்படிபட்ட சூழலில் வெற்றிமாறனின் இந்த பேச்சு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் ஜோடி… குஷ்பு தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!