Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக கூட்டணியில் உள்ள குழப்பத்திற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்.. என்ன நடக்கும்?

anna arivalayam

Siva

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:14 IST)
திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தொகுதி உடன்பாடு மற்றும் எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தி வருவதாக கூறப்பட்டாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் சின்னம்.

திமுக தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் தாங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அரசியல் கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டு தொகுதிகளில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது. அதேபோல் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி என்று கூறப்படும் நிலையில் அந்த ஒரு தொகுதியும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக கூறி வருகிறது.

ஆனால் தங்களது பானை சின்னத்தில் தான் போட்டு விடுவோம் என்று விசிகவும், அதேபோல் அதிமுக தங்களது பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மதிமுகவும் கூறி வருவதால் தான் இன்னும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அடுத்த பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டு சுமுக முடிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதியின் மனைவி..!