பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் விஜய் சேதுபதிக்கு வெறும் 15 கோடி மட்டுமே சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை தொடங்க இருக்கும் நிலையில் இதுவரை ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்கவில்லை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான விளம்பர வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வெறும் 15 கோடி மட்டுமே சம்பளம் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு 30 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறும் 15 கோடிக்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்தாலும் தொகுத்து வழங்குபவர்களுக்கு வெறும் 15 நாள் தான் வேலை என்றும் 15 வாரங்கள் சனி ஞாயிறு ஒளிபரப்பாகினாலும் சனிக்கிழமை மட்டுமே படப்பிடிப்பு என்றும் அன்று ஒரு நாளிலேயே இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்பதால் மொத்தம் விஜய் சேதுபதி 15 நாட்கள் மட்டும் தான் படப்பிடிப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது