தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்ப செண்டிமெண்ட் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்துக்கு ட்ரண்ட்டுக்கு ஏற்ப சொல்லி வெற்றி பெறும் இயக்குனர்கள் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் அதை சிறப்பாக செய்து வருபவர் இயக்குனர் பாண்டிராஜ்.
அப்படி அவர் இயக்கிய கடைகுட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது அவரின் தலைவன் தலைவி படம் ரிலீஸாகி 100 கோடி ரூபாய்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றியை அடுத்து மீண்டும் பாண்டிராஜ்- விஜய் சேதுபதி கூட்டணி ஒரு படத்துக்காக இணையவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக இயக்க விரும்பினார் பாண்டிராஜ். அதற்கான குறைவான சம்பளம் மற்றும் பட்ஜெட்டில் அந்த படத்தை இயக்க அவர் முடிவெடுத்தார். ஆனால் பொருளாதார சிக்கல்களால் தவிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்த கட்ட வேலைகளைத் தொடங்காததால் தற்போது பாண்டிராஜ் வேறு தயாரிப்பு நிறுவனத்திடம் செல்வது குறித்து ஆலோசித்து வருகிறாராம்.