Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

vinoth
ஞாயிறு, 15 ஜூன் 2025 (11:24 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது யாஷ் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன,

ராமாயணம் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காவ்யா மாறனுடன் திருமணமா?... வதந்திகளுக்கு பதில் அளித்த அனிருத்!

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments