Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி & நித்யா மேனன் நடிக்கும் தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
திங்கள், 30 ஜூன் 2025 (11:06 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

அதையடுத்து பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘தலைவன் தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். படம் சம்மந்தமாக வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘முத்த மழை’ சின்மயி வெர்ஷன்!

கிளாமர் இன்ஸ்டா போஸ்ட் எல்லாம் வேஸ்ட்டா போச்சே... தனுஷ் மீது அதிருப்தியில் அனிகா சுரேந்திரன்..!

தற்போது படத்தை எடுப்பதை விட விற்பது கடினமாகிவிட்டது- இயக்குனர் ராம் கவலை!

சிம்புவை வைத்து படமெடுத்தால் எனக்கு ரூ.20 கோடி தர வேண்டும்: வெற்றிமாறனுக்கு தனுஷ் நிபந்தனை?

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments