மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி!

vinoth
புதன், 5 நவம்பர் 2025 (17:36 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். அவர் அழைத்தால் கதை கூட கேட்காமல் இந்தியாவில் உள்ள எந்த நட்சத்திரமும் வந்து அவர் இயக்கத்தில் நடிப்பார்கள். அப்படிப்பட்ட மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் கேலிகளையும் விமர்சனங்களையும் பெற்றது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்த தோல்வியால் மணிரத்னம் ஒரு சிறு இடைவெளியை எடுத்துக் கொண்டு அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதிவந்தார்.

இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி!

சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள அஜித் 64 படத்தின் வேலைகள்!

இது பழைய கணக்கா? வில்லனாக நடிக்க வந்த 80ஸ் நடிகர்.. ஒரேடியாக மறுத்த அஜித்

திவ்யாவை பதவியிலிருந்து தூக்கிய பிக்பாஸ்! விஜே பாருவுக்கு கிடைத்த லக்கி சான்ஸ்!? - Biggboss season 9

மீண்டும் வேசம் போடும் ரங்கராஜ் பாண்டே

அடுத்த கட்டுரையில்
Show comments