சிவகார்த்திகேயனை அடுத்து கவின்… ‘KISS’ படத்துக்குக் குரல் கொடுத்துள்ள VJS!

vinoth
திங்கள், 15 செப்டம்பர் 2025 (08:40 IST)
சிவகார்த்தியேன் போல சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார் கவின். லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது. தற்போது அவர் நடிப்பில் ‘கிஸ்’ மற்றும் ‘மாஸ்க்’ ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் ’கிஸ்’ கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஜென் மார்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி கதையை விவரிக்கும் விதமாக வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் இதுபோல விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோட்டல் டாஸ்க்கிலும் பஞ்சாயத்து! வேற வேலையே இல்லையா? - Biggboss season 9

பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்! நடிகர் துல்கர் சல்மானுக்கு சம்மன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

அடுத்த கட்டுரையில்
Show comments