சென்சாரில் வலதுசாரித் தாக்கம் அதிகம்… ஓடிடிகள் படங்களை வாங்குவதில்லை – பா ரஞ்சித் ஆதங்கம்!

vinoth
திங்கள், 15 செப்டம்பர் 2025 (08:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில்,  நீலம் புரடெக்சன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அவர் தொடர்சியாகப் படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வரிசையில், தினேஷ் மற்றும் கலையரசன் நடிப்பில், ஆதிரை இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.  இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்தாலும் ரிலீஸாகாமல் தாமதமாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ள இந்த படம் UA சான்றிதழ் பெற்றது. இதையடுத்து படம் செப்டம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித் “சென்சாரில் இப்போது வலதுசாரியத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஓடிடி நிறுவனங்களோ அதிகமாக படங்களை வாங்குவதில்லை. அதனால் மக்களை நம்பிதான் தற்போது படங்களை எடுத்து வருகிறோம்” எனப் பேசியுள்ளார். சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘மனுஷி’ மற்றும் ‘பேட் கேர்ள்’ ஆகிய திரைப்படங்கள் சென்சாரில் பிரச்சனைகளை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments