விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது.
இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து நேற்று ரிலீஸாகியிருக்கும் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் முதல் நாள் வசூலில் ஒரு பெரியத் தொகையை ஈட்டியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த படத்துக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்கேற்றார்போலதான் படத்துக்கான விளம்பரமும் இருந்தது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில்தான் வசூலித்துள்ளதாம்.