Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் 29வது வருட சினிமா பயணம்…காமன் டிபியை ரிலீஸ் செய்த கலைப்புலி தானு

Advertiesment
விஜய்யின் 29வது வருட சினிமா பயணம்…காமன் டிபியை ரிலீஸ் செய்த கலைப்புலி தானு
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:52 IST)
தமிழ் சினிமாவில் 29 வருடத்தை நிறைவு செய்யும் நடிகர் விஜய்க்கு காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய். இவர் தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகராகவும் வெற்றிகரமான ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் நாளைய தீர்ப்பு படம் முதல் தற்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் படம் வரை 65 படங்களில் நடித்துள்ளார். அடுத்து வம்சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் 29 வருடத்தை நிறைவு செய்யும் வகையில் அவருக்கு காமன் டிபி வெளிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கலைப்புலி தாணு தனது டுவிட்டர் பக்கத்தில், தன் அயராது உழைப்பால் 29வது வருடத்தை இந்திய சினிமாவில் நிறைவு செய்யும்  அன்பு தம்பி @actorvijay யின் வெற்றி 100 ஆண்டுகள் கடந்து தொடர வாழ்த்தி இந்த Special mashup video வெளியிடுகிறேன் https://youtu.be/w40oGxZsjNU  #29YearsOfVijayism 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகப்பு துணியில் செமயா தெரியும் தொடை கவர்ச்சி - கியூட் ஹாட் ஷெரின்!