Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநகரம் ரீமேக் டப்பிங் பணிகளை முடித்த விஜய் சேதுபதி!

மாநகரம் ரீமேக் டப்பிங் பணிகளை முடித்த விஜய் சேதுபதி!
, புதன், 1 டிசம்பர் 2021 (17:09 IST)
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷான், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாநகரம். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய வெற்றி பெற்ற ’மாநகரம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இப்போது தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி இயக்குனரை அழைத்துக் கதைக் கேட்கும் சிம்பு!