Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 68 ஷூட்டிங் எப்போ? ரிலீஸ் எப்போ?... லேட்டஸ்ட் தகவல்!

விஜய் 68 ஷூட்டிங் எப்போ? ரிலீஸ் எப்போ?... லேட்டஸ்ட் தகவல்!
, சனி, 6 மே 2023 (09:40 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் விஜய், சமீபத்தில் தனது அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர் பி சௌத்ரிக்காக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தையா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… கோத்து விடும் சன் பிக்சர்ஸ்!