Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இழுபறிகளுக்குப் பின்னர் விஜய்யின் GOAT படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி!

இழுபறிகளுக்குப் பின்னர் விஜய்யின் GOAT படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி!

vinoth

, வெள்ளி, 1 மார்ச் 2024 (07:14 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பலகட்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை விற்பனையாகாமல் இருந்த GOAT படத்தின் ஓடிடி வியாபாரம் இப்போது முடிந்துள்ளது.

இந்த படத்தின் திரையரங்க ரிலீஸுக்குப் பின்னரான ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக GOAT படக்குழுவினர் சொன்ன விலை, மிக அதிகமாக இருந்ததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயங்கியதாக சொல்லப்பட்டது. இப்போது இரு தரப்புக்கும் சுமுகமான தொகையில் இந்த பிஸ்னஸ் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படமாக சாதனை படைத்த திரிஷ்யம்!