Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

GOAT படத்தின் வேற லெவல் அப்டேட்டைக் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

GOAT படத்தின்  வேற லெவல் அப்டேட்டைக் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

vinoth

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (14:08 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பலகட்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

அதை இப்போது உறுதிபடுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் சில பகுதிகளில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் ‘கோட் படத்துக்கான லொகேஷன் தேடுதலில்’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் கோட் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மாஸ்கோவில் நடக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூகவலைதளங்களில் கவனம் ஈர்க்கும் வடக்கன் பட போஸ்டர்