Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது யார் பார்த்த வேலை ன்னு தெரியல: இயக்குனர் அஜய் ஞானமுத்து புலம்பல்

இது யார் பார்த்த வேலை ன்னு தெரியல: இயக்குனர் அஜய் ஞானமுத்து புலம்பல்
, புதன், 18 மார்ச் 2020 (10:44 IST)
தளபதி 65 படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அஜய் ஞானமுத்து ’இது யார் பார்த்த வேலைன்னு தெரியல’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
டிமாண்டி காலனி, இமைக்காநொடிகள் படங்களை அடுத்து தற்போது ’கோப்ரா’ என்ற படத்தை இயக்கி  வரும் அஜய்ஞானமுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார் 
 
இந்த நிலையில் முன்னணி இணையதளம் ஒன்றில் ’தளபதி 65’ படத்தை அஜய்ஞானமுத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை அஜய்ஞானமுத்து மறுத்துள்ளார். இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை என்றும் தளபதி 65 படம் குறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை என்றும் அஜய்ஞானமுத்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’தளபதி 65’ படத்தை இயக்குவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமலேயே உள்ளது
 
இருப்பினும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ‘தளபதி 65’ படத்தை இயக்க வாய்ப்பு அதிகம் என்றும் அந்த படம் ‘துப்பாக்கி 2’ படமாக இருக்க இன்னும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ், கொரோனா பரபரப்பு அடங்கிய பின்னர் ‘தளபதி 65’ படம் குறித்த அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டரை ரிலீஸ் செய்ய முடியாது: விஜய்யிடம் நேரடியாக தெரிவித்த விநியோகிஸ்தரால் பரபரப்பு