Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ஆண்டனி, ரித்திகா நடிக்கும் கொலை… வித்தியாசமான டிரைலர் வெளியீடு

Advertiesment
விஜய் ஆண்டனி, ரித்திகா நடிக்கும் கொலை… வித்தியாசமான டிரைலர் வெளியீடு
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:46 IST)
விஜய் ஆண்டனி இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை என்ற படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொல்லபடுகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் படக்குழுவினரோடு இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி “எப்பொழுதும் ஒரு படத்தின் முழு பொறுப்பும் இயக்குனர் உடையதுதான். அவருக்கு துணையாக இருப்பவர்கள்தான் என்னைப் போன்ற டெக்னீசியன்கள். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சினிமாவுக்குக் கிடைத்திருக்கிற தரமான இயக்குனர். அது ‘கொலை’ படத்தைப் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இந்த திரைப்படம் ஒரு உலகத் தரமான திரைப்படம்.” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு கொலை சம்மந்தமாக துப்பு துலக்கும் நபராக விஜய் ஆண்டனியும் அவரின் உதவியாளராக ரித்திகாவும் நடித்துள்ளனர். வயதான டிடெக்டிவ்வாக விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான இந்த டிரைலர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல சினிமா விமர்சகர் & தொகுப்பாளர் கவுசிக் மாரடைப்பால் மரணம்