Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!
, செவ்வாய், 12 ஜூலை 2022 (15:10 IST)
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களில் ஒன்று ‘கொலை’
விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த எல்லா படங்களையும் விட அவர் நடித்து முடித்துள்ள கொலை என்ற திரைப்படம் இப்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலை படத்தை  விடியும் முன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனமான ‘Think Music’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்துக்கு 200 பேரை கூட்டிட்டு போனேன்! – நெகிழ்ந்து போன இசையமைப்பாளர்!