Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல சினிமா விமர்சகர் & தொகுப்பாளர் கவுசிக் மாரடைப்பால் மரணம்

பிரபல சினிமா விமர்சகர் & தொகுப்பாளர் கவுசிக் மாரடைப்பால் மரணம்
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:43 IST)
தமிழ் சினிமா பற்றி விமர்சனங்கள் வசூல் விவரங்கள் ஆகியவற்றை டிராக் செய்து வெளியிட்டு வந்த கவுசிக் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

தமிழின் முன்னணி யுடியூப் சேனல்களில் பணியாற்றிவர் கவுசிக். குறிப்பாக திரை விமர்சனங்கள், பிரபலங்களின் நேர்காணல்கள் என ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தவர். இந்நிலையில் நேற்று அவர் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 36 மட்டுமே. பலருக்கும் இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்பு கூட டிவிட்டரில் பல தகவல்களை பகிர்ந்து இயல்பாக இருந்துள்ளார். இவரின் மறைவை ஒட்டி நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் அடுத்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன்