Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி படத்தின் டைட்டில் இதுதான்: நாளை பூஜையுடன் படப்பிடிப்பு!

விஜய் ஆண்டனி படத்தின் டைட்டில் இதுதான்: நாளை பூஜையுடன் படப்பிடிப்பு!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (21:31 IST)
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தின் பூஜைக்கு பின்னர் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்கு ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் கதை என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளி வரலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மாநாடு’ டீசர் பாணியில் மறு ஆக்கம்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு!