Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி சக்திவேலின் அடுத்த பட அறிவிப்பு!

Advertiesment
பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி சக்திவேலின் அடுத்த பட அறிவிப்பு!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘வழக்கு எண் 18/9’. இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தாலும், அடுத்த படமான ‘ரா ரா ராஜசேகர்’, மற்றும் யார் இவர்கள் ஆகிய இரு படங்களும் எல்லா பணிகளும் முடிந்தும் இன்னும் ரிலீஸாகவில்லை. இதனால் பாலாஜி சக்திவேலின் திரைப்படம் ரிலீஸாகி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்நிலையில் இப்போது பாலாஜி சக்திவேல் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு நான் நீ நாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன் போட்ட அதுல்யா ரவி… வேறொரு நடிகைக்கு சென்ற நட்டி பட வாய்ப்பு!