Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மாநாடு’ டீசர் பாணியில் மறு ஆக்கம்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு!

Advertiesment
’மாநாடு’ டீசர் பாணியில் மறு ஆக்கம்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (21:29 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் டீசர் போலவே சில இளைஞர்கள் மறுஆக்கம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் போலவே அந்த இளைஞர்கள் படமாக்கி சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
திறமைசாலிகள் எல்லா இடத்திலுமிருக்கிறார்கள். சில சமயங்களில் நம்முடனும் பயணிப்பார்கள். நமக்குத் தெரியாது.  இதுபோன்ற புதியவர்கள் "மறுஆக்க" முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்... விரைவில் திரைத்துறைக்குள் நுழையவும் உங்கள் திறமை உதவட்டும்.
 
 ஏற்கனவே இதே போல் சூர்யா நடித்த அயன் திரைப்படம் போல் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் என்பதும் அந்த இளைஞர்களுக்கு தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#62YearsOfKamalism ’ விக்ரம் ’பட போஸ்டர் ரிலீஸ்...லோகேஷ் வாழ்த்து