Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கிலும் தீராத தல, தளபதி தகறாரு! – ட்விட்டரில் மோதிக் கொண்ட ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (13:59 IST)
கொரோனா பாதிப்பினால் ஊரே முடங்கி கிடக்கும் சூழலிலும் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே உருவாகியுள்ள மோதல் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படம் ஏப்ரலில் வெளியாவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் எப்போது என தெரியாத நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் மாதம் வர இருக்கிறது. அதனால் விஜய்யின் பிறந்தநாளில் “மாஸ்டர்” ரிலீஸ் ஆகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

அதை தொடர்ந்து மாஸ்டர் ரிலீஸ் குறித்து ட்விட்டரில் அவர்கள் பதிவிட, அதை பார்த்த அஜித் ரசிகர்கள் “மாஸ்டர்” படம் நன்றாக போகாது என்று கூறி #June22BlackdayForVijay என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய் ரசிகர்கள் நடிகர் அஜித்தை கிண்டல் செய்யும் விதமாக அவரது பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய, இரு தரப்பினரிடையே பெரும் மோதல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments