தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத மாபெரும் ஆளுமை படைத்த நடிகர்களில் சிறந்தவர் சியான் விக்ரம். விசித்திரமான கதைகளை தேர்ந்தெடுத்து வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னுக்கு வந்த விக்ரம் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பரம்க்குடியில் பிறந்தவர் நடிகர் விக்ரம் சினிமாவில் எந்த ஒரு முன் அனுப்பவுமின்றி கடந்த 1990 ஆம் என் காதல் கண்மணி படத்தின் கால் அடி எடுத்துவைத்தார். முதல் படமே படுதோல்வி அடைந்தது. பின்னர் 1992 ல் PC ஸ்ரீராம் ஒளிப்பதிவில், இளையராஜா இசையில் வெளிவந்த மீரா , 1994ல் வெளிவந்த புதிய மன்னர்கள் உள்ளிட்ட தொடர் தோல்விகளை சந்தித்த விக்ரம் சேது படத்தின் மூலம் தான் தன் திறமையை வெளிக்காட்டி தான் யார் என்பதை நிரூபித்தார்.
ஒரு நடிகராக மட்டுமின்றி, அஜித், பிரவுதேவா, அப்பாஸ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். விக்ரம் திரைப்பயணத்தில் மாபெரும் புகழ் சேர்த்த படங்களான காசி, பிதாமன் , தெய்வத்திருமகள் , ஐ , அந்நியன் உள்ளிட்ட படங்கள் தென்னிந்திய சினிமாவின் வெற்றியின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. அஜித்- விஜய் , ரஜினி - கமல், சிவாஜி - எம்ஜி ஆர் போன்ற ஹீரோக்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என உண்டு ஆனால் விக்ரமிற்கு மட்டும் தான் பிடிக்காதவர் என ஒருத்தரும் இதுவரை இல்லை.. No haters நாயகனுக்கு A very happy birthday....