சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிகப்பு கலர் புடவை அணிந்திருந்த மாளவிகா மோகனின் இடுப்பு புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் செம வைரலானது. இதை வைத்து நிறைய மீம்ஸ் போட்டு ட்ரெண்டாக்கினர் இணையவாசிகள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்ததால் தற்போது அதே ஸ்டைலில் கண்ணாடி முன் நின்று கருப்பு புடவையில் குஷி ஜோ இடுப்பு போல் ஜிவ்ன்னு இழுக்கும் இடுப்பை காட்டி செம போஸ் கொடுத்துள்ளார்.