Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிப் போகும் விஜய்யின் 69 படம்.. பின்னணி என்ன?

தள்ளிப் போகும் விஜய்யின் 69 படம்.. பின்னணி என்ன?

vinoth

, வியாழன், 30 மே 2024 (11:25 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் அக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் இடைப்பட்ட நாட்களில் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதால் இந்த தள்ளிவைப்பு என சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்ததும் விஜய்யின் கட்சி மாநாடு பிரம்மாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோகன் நடிக்கும் ஹரா படத்தின் சென்சார் தகவல் வெளியானது!