விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி வைரல் ஆகி வருகிறது.
விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய மழை படிக்காத மனிதன் என்ற படத்தை விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று வெளியாகி உள்ள டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த டீசரில் விஜய் ஆண்டனி ஆக்சன் காட்சிகள் அதிரடி காட்சிகள் இருக்கும் நிலையில் இந்த படமாவது விஜய் ஆண்டனிக்கு கை கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய் ஆண்டனி நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அச்சு ராஜா ணி மற்றும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.