Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோகன் நடிக்கும் ஹரா படத்தின் சென்சார் தகவல் வெளியானது!

மோகன் நடிக்கும் ஹரா படத்தின் சென்சார் தகவல் வெளியானது!

vinoth

, வியாழன், 30 மே 2024 (10:57 IST)
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தனது இளமைக் காலத்திலேயே மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த மோகன் இப்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஜூன் 7 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளது.  படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் வழிகாட்டுதலின் படி இந்த படத்தைப் பார்க்கலாம்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னைக் கேட்காமலேயே என் பாடல் வரிகளைப் பயன்படுத்துகின்றனர்… கௌதம் மேனனை சாடிய வைரமுத்து!