Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜார்ஜியாவில் ப்ளான் பண்ணதை எடுத்ததா தளபதி 65 குழு! அப்செட்டில் இயக்குனர்!

Advertiesment
ஜார்ஜியாவில் ப்ளான் பண்ணதை எடுத்ததா தளபதி 65 குழு! அப்செட்டில் இயக்குனர்!
, புதன், 28 ஏப்ரல் 2021 (08:19 IST)
படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றிருந்த விஜய் 65 படக்குழுவினர் மோசமான வானிலை காரணமாக நினைத்தக் காட்சிகளை படமாக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று படக்குழுவினர் ஜார்ஜியா சென்றடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டு அசத்தி இருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வந்துள்ள நிலையில் படக்குழு நினைத்த அளவுக்குக் காட்சிகளை படமாக்க முடியவில்லையாம். காஷ்மீரில் நடப்பது போன்ற காட்சிகளை படமாக்க இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அங்கு முழு சீக்வென்ஸையும் எடுக்க முடியவில்லையாம். அதனால் பாதி ஷூட் முடிந்த நிலையிலேயே படக்குழு மீதியை இந்தியாவில் எடுத்துக் கொள்ளலாம் எனக் கிளம்பிவிட்டதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேமஸ் ஆனதும் ப்ரண்ட்டை கட் பண்ணிய குக் வித் கோமாளி பிரபலம்!