விஜய் ரசிகர்கள் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் தவிப்பவர்களுக்காக இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் பல இடங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் அவர்களுக்கு பாராட்டுகளை பெற்றுள்ளது.