சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் "தளபதி 63" படத்தில் நடித்து வருகிறார்.
தெறி, மெர்சல் போன்ற மெகா ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் 3 வது முறையாக விஜய் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு நடிகை நயன்தாரா ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர் , விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராக் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகவுள்ள இப்படத்தின் பாடல்வரிகளை பாடலாசிரியர் விவேக் தான் எழுதுகிறார். இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் இடப்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல்களை எழுதி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நயந்தாராவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சென்னையில் உள்ள பிரபல கால்பந்து கோடை கால பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது : விஜய் 63 இப்படத்தில் கால்பந்து வீரராக நடித்துள்ளதால் இப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு கால்பந்து விளையாட்டு பரவலாகும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.