Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாணத்துக்கு ரெடியான நயன்தாரா! கண்டீஷன் போட்ட காதலர்!

Advertiesment
கல்யாணத்துக்கு ரெடியான நயன்தாரா! கண்டீஷன் போட்ட காதலர்!
, வெள்ளி, 10 மே 2019 (20:19 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 


 
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அதுமட்டின்றி  சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  "காதல், குடும்பம், அன்பு என வாழ்க்கை நல்ல விஷயங்களால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது இந்த காதல் திருமணம் வரை சென்றுள்ளது.  நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதற்குள் நயன்தாரா கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்துக் கொண்டு பிரியாகிவிட வேண்டும் என்று நயன் முடிவு செய்திருக்கும் நிலையில், அவரது காதலர் விக்னேஷ் சிவன்கண்டீஷன் போட்டுள்ளாராம். அதாவது, நீ யார் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் சிம்பு கூட மட்டும் நடிக்க கூடாது என கூறியுள்ளாராம். 
 
காரணம் சிம்பு - நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு நீண்ட ஆண்டுகளாக இருவரும் பேசாமல் இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள். அப்படத்திற்கு பிறகு இருவரும் எப்போதும் போல நட்பாக பேசி வரும் நிலையில், சிம்பு தனது புது படத்தில் நயனை ஹீரோயினாக நடிக்கவைக்க  முயற்சி செய்தார். இது தொடர்பாக நயனிடமும் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.
 
இதனை அறிந்த விக்னேஷ் சிவன், நீ யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்  ஆனால் சிம்புவுடன் நடிக்க கூடாது, என்று நயனுக்கு தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் 'தேவர் மகன் 2' புதிய தகவல்கள்!