Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதே துள்ளல், அதே காமெடி, அதே ஃபைட்.. விஜய்யின் ‘சச்சின்’ டிரைலர் ரிலீஸ்..!

Advertiesment
விஜய்

Siva

, திங்கள், 14 ஏப்ரல் 2025 (13:15 IST)
விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டன்று வெளியான ‘சச்சின்’ திரைப்படம், இன்றுடன் 20 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.  இந்நிலையில், இந்த  திரைப்படம் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீரிலீஸ் ஆகவுள்ளது.  இதனையொட்டி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புதிய ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
 
இந்த ட்ரெய்லரில், ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் பல முக்கிய காட்சிகள் புது பாணியில் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் என்பதையும் தவிர்த்து, ரசிகர்கள் இதனை தொடர்ந்து பார்ப்பது மட்டுமல்லாது, 20 வருடங்களுக்கு பிறகு கூட ஒரு ட்ரெய்லர் இத்தனை பேரில் ஆர்வத்தை உருவாக்குவது ஆச்சரியமளிக்கிறது என்றும் அதே துள்ளல், அதே காமெடி, அதே ஃபைட்டை காண ஒரு வாய்ப்பு என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
 
சச்சின் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். அவர்களுடன் வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய் மற்றும் பிபாஷா பாசு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார், மேலும் இசையமைப்பாளராக தேவிச் ஸ்ரீ பிரசாத் பணியாற்றியிருந்தார்.
 
20 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களை திரையரங்குகளுக்கே வரவழைக்கும் தன்மை கொண்ட ‘சச்சின்’, மீண்டும் வெற்றியடையுமா? என்பதை பொறுத்திருந்து காணலாம்!
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சிம்பு 49’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!