Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

Mahendran
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (18:35 IST)
விஜய் நடித்த ’சச்சின்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், இந்த படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில், ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான ’சச்சின்’ என்ற திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தின் நாயகியாக ஜெனிலியா, காமெடி நடிகராக வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் சூப்பர் ஸ்டார் நடித்த ’சந்திரமுகி’ படத்துடன் வெளியானதால், பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ஓரளவு நல்ல வசூலை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் மறுபடியும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’கில்லி’ திரைப்படம் அரங்கம் நிரம்பிய காட்சிகளாக 50 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், அந்த வசூலை ’சச்சின்’ திரைப்படம் தொட வாய்ப்பே இல்லை என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும், மறு ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்வதே பெரிய விஷயம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

திடீரெனப் அஜித் படம் பற்றிப் பரவிய தகவல்.. உடனடியாகப் பதிலளித்த சுரேஷ் சந்திரா!

அடுத்த கட்டுரையில்
Show comments