சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளை அளித்து வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், ரெட்ரோ படத்தின் கதை உண்மையில் சூர்யாவுக்காக எழுதப்பட்டதல்ல என்றும், இது முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக எழுதப்பட்டதாகவும் அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்ரோ படத்தை ரஜினிக்காக எழுதும்போது, "அவர் ஏற்கனவே திருமணம் ஆகி, குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர், குடும்பத்திற்காக அவர் கேங்க்ஸ்டர் வாழ்க்கையில் இருந்து எப்படி வெளியே வருகிறார்?" என்பதை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தில் சூர்யா வந்தவுடன் திருமணம் என்பதை காதல் என மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு கிராமத்து கதையையும் கூறியிருந்தேன். அந்த கதை அவருக்கு பிடித்திருந்தாலும், சில காரணங்களால் அதில் அவர் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் அவர் அண்ணாத்த படத்தை தேர்வு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ரெட்ரோ படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது என்பது தவறான தகவல் எனவும், விஜய்க்காக மூன்று நான்கு கதைகளை எழுதி அவரிடம் சொல்லியிருந்தாலும், எந்த கதையும் செட் ஆகவில்லை என்று அவர் நேரடியாகவே கூறினார் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அதனால் தான், என்னால் அவருக்குத் திறமையாக கதை சொல்ல முடியவில்லை என்று நினைத்தேன்” என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.