Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

Advertiesment
சூப்பர் சிங்கர்

Siva

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (09:22 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டதால் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
 
தேனிலவு, அமீர் - பாவனி  திருமணம் உள்ளிட்ட காரணங்களால் தான் பிரியங்கா தற்காலிகமாக விலகி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு பதிலாக இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மகாநதி சீரியல் 'காவிரி' என்ற கேரக்டரில் நடித்து பார்வையாளர்கள் மனதில் கொள்ளை அடித்த லட்சுமி பிரியா தொகுத்து வழங்கியுள்ளார்.
 
இது குறித்த ப்ரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில், பார்வையாளர்கள் லட்சுமி பிரியாவுக்கு பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.  ஏற்கனவே சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு இருப்பதை தெரிந்து கொண்ட விஜய் டிவி, பிரியங்காவுக்கு சரியான மாற்று இவர்தான் என்று அவரை களத்தில் இறங்கியுள்ளனர்.
 
அவரும் ப்ரோமோ வீடியோவில் அசத்தியிருப்பதை பார்க்கும்போது, இந்த நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரியங்காவின் கோமாளித்தனமான காமெடிகள் மற்றும் சில இரட்டை அர்த்த வசனங்களால் கடுப்பில் இருந்த ரசிகர்கள், தற்போது "பிரியங்கா சனியன் தொலைந்தது, லட்சுமி பிரியாவை வரவேற்கிறோம்" என்று கமெண்ட் அளித்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆனால், தேனிலவு முடிந்து திரும்பி வந்ததும் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா வந்து விடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ரெட்ரோ’ சூர்யாவுகாக எழுதிய கதை இல்லை: மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்..!