Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுக இயக்குனரின் படத்தை வாங்கிய விக்னேஷ் சிவன் ! விநியோகஸ்தராக புது அவதாரம்!

அறிமுக இயக்குனரின் படத்தை வாங்கிய விக்னேஷ் சிவன் ! விநியோகஸ்தராக புது அவதாரம்!
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:44 IST)
இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட விக்னேஷ் சிவன் இப்போது விநியோகஸ்தராகவும் மாறியுள்ளார்.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் வாங்கி வெளியிட உள்ளார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த படம் தீபாவளிக்குப் பின்னர் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இயக்குனர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளராக அறியப்பட்ட விக்னேஷ் சிவன் இப்போது விநியோகஸ்தராகவும் மாறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அரசியல் வருகை… குருநாதர் வீட்டில் இருந்து வந்த வாழ்த்து!