Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராக்கி இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் – வரிசையாக கமிட் ஆகும் தனுஷ்!

ராக்கி இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் – வரிசையாக கமிட் ஆகும் தனுஷ்!
, வியாழன், 29 அக்டோபர் 2020 (10:00 IST)
நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷ்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமான படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகர். வரிசையாக படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் தனுஷ் தனது முன்னாள் மேனேஜர் வினோத் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை அவரது அண்ணனான செல்வராகவன் இயக்குவார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்காக இசையமைப்பாளராக ஷான் ரோல்டனும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதையடுத்து இப்போது அவர் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே செல்வராகவனை வைத்து சாணிக் காயிதம் எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் கையில் இருக்கும் தழும்பு – இணையத்தில் வைரலான புகைப்படம்!