Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷீரடி சாய்பாபா கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

nayan wikki
, வியாழன், 5 மே 2022 (17:59 IST)
nayan wikki
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது 
 
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்பதும் இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் கோவிலாக சுற்றிப்பார்க்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் ஜோடி தற்போது சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர் 
 
என் கண்மணியுடன் ஷீரடி கோவிலுக்கு சென்று உள்ளேன் என்றும் மனதுக்கு நிம்மதியாக இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இளம் நடிகை மரணம்….ரசிகர்கள் அதிர்ச்சி....