தமிழ் திரையுலகின் நட்சத்திரமான நடிகை நயன்தாராவுக்கு, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், அவரது 41வது பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்டமான ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரே சொகுசு காரைப் பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 9.5 கோடி ஆகும்.
2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு உயிர் மற்றும் உலக் என இரட்டை மகன்கள் உள்ளனர். பரிசாக அளிக்கப்பட்ட காரின் முன்பக்கத்தில் அமர்ந்தவாறு மகன்களுடன் இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
முன்னதாக, நயன்தாராவின் 39வது பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள 'மேபக்' காரைப் பரிசாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.