Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth
திங்கள், 3 பிப்ரவரி 2025 (09:28 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சண்டிகாரில் தொடங்கி நடந்தது. இந்த படத்துக்கு LIK (Love insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாக திட்டமிடப்பட்டு படக்குழு வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரதீப்பின் டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments