வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ராஜீவ் மேனன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த படத்திற்காக ரயில் விபத்து காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இதற்காக 8 கோடி ரூபாய் செட் போடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஏற்கனவே இந்த படத்திற்காக அதிக செலவு ஆகியுள்ள நிலையில் இவற்றையும் சேர்த்து மொத்தம் 40 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இருப்பினும் இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவிருப்பதால் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.