தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல் அதிகரித்துள்ள நிலையில் பாஜக  நிர்வாகியை பி.டி.ஆர்  தன் டுவிட்டர் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	சமீபத்தில், பெரிய பரம்பரையில் வெள்ளிக்கரண்டியுடன்  பிறந்தவர் என்பதைத் தவிர இப்பிறவியில்  ஏதேனும்  நல்லது செய்தது உண்டா? தமிழக அரசியலில் பிடி.ஆர்.பழனிவேல்  ஒரு சாபக் கேடு என அண்ணாமலை பேசியதுடன், தமிழக நிதியமைச்சரை செருப்புக்கு சமமில்லை  என்று கடுமையாக சாடினார்.
இதற்கு  சீமான், காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், பாஜகவில் குறிப்பிட்ட  நிர்வாகிகளை தனது டுவிட்டரில்  நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிளாக் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் சூரியாவையும் பி.டி.ஆர் பிளாக் செய்துள்ளார்.
இதற்கு சூரியா தனது டுவிட்டர் பக்கத்தில், ஒன்னு ஜெயில்ல LOCK பண்றது இல்ல ட்விட்டர்ல BLOCK பண்றது..  பரம்பரை பயந்துருச்சு எனப் பதிவிட்டுள்ளார்.