Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் லியோ ஷூட்டிங்கில் இணைந்த சஞ்சய் தத்!

விஜய்யின் லியோ ஷூட்டிங்கில் இணைந்த சஞ்சய் தத்!
, சனி, 11 மார்ச் 2023 (13:24 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

இந்நிலையில் இப்போது படத்தில் தனது காட்சிகளில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்புக் குழுவோடு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மிஷ்கின் மற்றும் அர்ஜுன் சம்மந்தப்பட்ட காட்சிகளை லோகேஷ் படமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்