ஆர்வம் காட்டாத தாணு… சிம்பு படத்தைத் தானே தயாரிக்கிறாரா வெற்றிமாறன்?

vinoth
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (18:00 IST)
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த படமும் கைவிடப்பட்டு விட்டதாகவும், அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமானதுதான் என்று  அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. பட்ஜெட் காரணமாக இந்த படத்தைத் தொடங்க தாணு விரும்பவில்லை என்று சொல்லப்படும் நிலையில் தானே இந்த படத்தைத் தயாரிக்கும் முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் கூடிய விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைசன் போகாதீங்க.. ட்யூட் போங்கன்னு சொன்னாங்க.. ஆனா அந்த டைரக்டர் செஞ்சுவிட்டாரு! - பா.ரஞ்சித்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போஸில் துஷாரா விஜயன்!

என் 27 வருட வாழ்க்கையில் கற்றதை விட…. மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்த துருவ்!

அந்த கேள்வியைக் கேட்டு துருவ்வின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்… பசுபதி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments