தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இந்நிலையில் வாடிவாசல் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. சூர்யா, வெங்கி அட்லூரி படத்திலும், வெற்றிமாறன் சிம்பு நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் பட்ஜெட் காரணமாக சிம்பு –வெற்றிமாறன் படமும் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படத்தைக் கைவிட விரும்பாமல் எப்படியாவது அதைத் தொடங்கிவிடவேண்டும் என சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யா அடுத்த ஆண்டு வரை தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பதால் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.