அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ்… ஹீரோயின் இவர்தானா?

vinoth
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (17:56 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக  நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைசன் போகாதீங்க.. ட்யூட் போங்கன்னு சொன்னாங்க.. ஆனா அந்த டைரக்டர் செஞ்சுவிட்டாரு! - பா.ரஞ்சித்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போஸில் துஷாரா விஜயன்!

என் 27 வருட வாழ்க்கையில் கற்றதை விட…. மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்த துருவ்!

அந்த கேள்வியைக் கேட்டு துருவ்வின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்… பசுபதி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments